கொக்கெய்னுடன் தென்னாபிரிக்க பிரஜை ஒருவர் கைது

கொக்கெய்னுடன் தென்னாபிரிக்க பிரஜை ஒருவர் கைது

கொக்கெய்னுடன் தென்னாபிரிக்க பிரஜை ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 May, 2021 | 5:37 pm

Colombo (News 1st) கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்க பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கென்யாவின் நைரோபியிலிருந்து இன்று (09) காலை இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க பிரஜையே போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் பயணப்பொதியிலிருந்த ஷெம்பூ போத்தல்களில் மிக சூட்சுமமாக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஷெம்பூ போத்தல்களில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பொதிகளில் 2 கிலோ 29 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்