இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் பட்டியல்

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் பட்டியல்

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் பட்டியல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 May, 2021 | 1:35 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக நாட்டின் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் (09) அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம உத்தியோகத்தர் பிரிவொன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அந்தவகையில்,

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென். கூம்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாபொல, குடுபிட்டிய, குடவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தவ்கலகம, கங்கலகமுவ, கொஸ்வத்தை, தபஸ்ஸரகந்த, வத்துராவ, வெம்பியகொட, வெத்தாகல கிழக்கு, வெந்தாகல மேற்கு மற்றும் தவுகலகம ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோலேகந்த, இறம்புக்க, கத்லான, தனபெல, இலும்பகந்த, பொத்துபிட்டி தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்