ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2021 | 4:23 pm

Colombo (News 1st) ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி முதல் ஜூன் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நேற்று அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான குழாத்தில் இடம்பெற்றுள்ளோர் பின்வருமாறு

Ajinkya Rahane
Rohit Sharma
Shubman Gill
Mayank Agarwal
Cheteshwar Pujara
Hanuma Vihari
Rishabh Pant
Ashwin
Ravindra Jadeja
Axar Patel
Washington Sundar
Jasprit Bumrah
Ishant Sharma
Mohammed Shami
Mohammed Siraj
Shardul Thakur
Umesh Yadav
KL Rahul

விரிதிமன் சஹாவின் உடற்தகுதியை அடிப்படையாகக் கொண்டு, அவர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

குல்தீப் யாதவ், நவ்தீப் ஷைனி, பிரித்வி ஷா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின்னர் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்