மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்திய 39 பேர் கைது

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்திய 39 பேர் கைது

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்திய 39 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 May, 2021 | 3:39 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்திய 39 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 38 பேர் மதுபான விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதனைத் தவிர தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் நபர்களுக்கு திடீர் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 188 பேருக்கு திடீர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் மற்றும் பஸ்தரிப்பிடங்களை அண்மித்த பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்