புதிதாக 6 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டம்; 60,000 கட்டில்களை தயார் செய்யவும் நடவடிக்கை

புதிதாக 6 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டம்; 60,000 கட்டில்களை தயார் செய்யவும் நடவடிக்கை

புதிதாக 6 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டம்; 60,000 கட்டில்களை தயார் செய்யவும் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 May, 2021 | 5:37 pm

Colombo (News 1st) நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக 06 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா அவசர சிகிச்சை மற்றும் சுகாதார கட்டமைப்பிற்கான முன்னாயத்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

கொரோனா நோயாளர்களுக்காக 60,000 கட்டில்களை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டிலுள்ள 32 வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் செயற்றிட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும் என மருத்துவர் ஜயசுந்தர பண்டார சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்