உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

08 May, 2021 | 8:50 pm

Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி டொக்டர் ஒலிவியா நீவெரஸை (Olivia Nieveras) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

சவால் மிக்கதொரு நேரத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை பெற்றுத்தருமாறு டொக்டர் ஒலிவியா நீவெரஸிடம் எதிர்க்கட்சித் த​லைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து வழியிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க உலக சுகாதார ஸதாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் தயாரென இந்த சந்திப்பின்போது ஒலிவியா நீவெரஸ் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்