AstraZeneca தடுப்பூசிகளை பெறுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபன தலைவருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

by Bella Dalima 07-05-2021 | 3:46 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom முயற்சிகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டுள்ளார். முதலாம் அலையை இலங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த முறைமையை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பாராட்டியதாக ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறையும் மிக விரைவில் கொரோனா அலையை இலங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். Sinopharm  தடுப்பூசி பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை எதிர்வரும் மூன்று நாட்களில் வழங்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைவாழ் மக்களின் அதிகமானவர்களுக்கு Sinopharm தடுப்பூசியை வழங்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.