கொழும்பில் 24 மணி நேரத்தில் 326 கொரோனா நோயாளர்கள்

24 மணித்தியாலங்களில் 326 கொரோனா நோயாளர்கள் கொழும்பில் பதிவு

by Bella Dalima 07-05-2021 | 3:34 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் 326 கொரோனா நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். களுத்துறையில் 309 நோயாளர்களும் கம்பஹாவில் 273 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் 1851 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,19,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,00,885 பேர் குணமடைந்துள்ளனர். 17,805 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன. அதற்கமைய, நாட்டில் இதுவரை 745 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, வெலிசறை பொருளாதார மத்திய நிலையம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தில் 14 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மன்னார் நகர் பகுதிக்கு அத்தியாவசிய தேவையின்றி செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.