மஹரகம நகர சபை கைகலப்பு: நிஷாந்த விமலச்சந்திர கைது

மஹரகம நகர சபை கைகலப்பு: நிஷாந்த விமலச்சந்திர கைது

by Bella Dalima 07-05-2021 | 5:46 PM
Colombo (News 1st) மஹரகம நகர சபையில் நேற்று (06) நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் நகர சபை உறுப்பினர் நிஷாந்த விமலச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். மாநகர சபையின் உறுப்பினரான சாவித்திரி குணசேகரவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம நகர சபையில் நேற்று நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது உறுப்பினர்களான நிஷாந்த விமலச்சந்திரவிற்கும் சாவித்திரி குணசேகரவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. மாநகர சபையின் உறுப்பினர் அறைக்குள் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை குறித்து இந்த கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மாநகர சபையின் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட நகர சபை உறுப்பினர் நிஷாந்த விமலச்சந்திர, கங்கொடவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.