by Bella Dalima 07-05-2021 | 5:35 PM
Colombo (News 1st) திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கிண்ணியாவிலிருந்து கப்பல்துறைக்கு சென்ற சிலர், அங்குள்ளவர்களுடன் நள்ளிரவு 01 மணியளவில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நான்கு பேரில் மூன்று இளைஞர்களும் 60 வயதான ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சீனக்குடா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.