வாழைச்சேனையில் கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2021 | 3:07 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாழைச்சேனை, மீயன்குளம் பகுதியில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரொன்றே வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அதிக வேகத்தில் குறித்த கார் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, காரில் பயணித்த ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவருக்கும் 31 வயது என குறிப்பிட்ட பொலிஸார், குறித்த பெண் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கூறினர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்