கொரோனா நிவாரண நிதி திரட்டும் விராட் கோலி 

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் விராட் கோலி, அனுஷ்கா சர்மா

by Bella Dalima 07-05-2021 | 5:27 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 7 கோடி இந்திய ரூபா அளவிற்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விராட் கோலி. கொரோனா நிவாரண நிதிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக Ketto அமைப்பின் வழியாக 7 கோடி ரூபா நிதி திரட்டவுள்ளார். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து 2 கோடி இந்திய ரூபா வழங்கியுள்ளார்கள்.

ஏனைய செய்திகள்