இன்று (07) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

இன்று (07) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2021 | 3:55 pm

Colombo (News 1st) நாட்டின் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (07) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவின் எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ தெற்கு, சூரியபாலுவ வடக்கு, கீழ் கரகஹமுன வடக்கு, மேல் கரகஹமுன வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்த பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பிட, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தன மேற்கு, நிவுத்கம, பொல்ஹேன கிராம உத்தியோகத்த பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்புர கிராம உத்தியோகத்த பிரிவும் மத்துமக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருதலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவும், மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த, கீழ் பஹலஹேவஸ்ஸ ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்