இந்தோனேசிய தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு

இந்தோனேசிய தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2021 | 8:14 pm

Colombo (News 1st) இந்தோனேசிய தூதுவர் குஸ்தி நுங்ரா ஆர்டியாசாவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

COVID தொற்றினால் இந்தோனேசியாவும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதுடன், முக்கிய தீர்வாக நோயெதிர்ப்பு சக்தி வேலைத்திட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை அளித்ததாக, இந்தோனேசிய தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை தொடர்பில் இந்தோனேசியத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்