Sputnik V ஏற்றும் பணிகள் ஆரம்பம்; Pfizer தடுப்பூசியை தருவிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

by Staff Writer 06-05-2021 | 8:09 PM
Colombo (News 1st) Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டன. அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள கொலன்னாவை - கொத்தட்டுவ பிரதேச மக்களுக்கே ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்பூசிகள் முதலில் வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசியை 65 இலட்சம் பேருக்கு வழங்க முடியும் எனவும் மூன்று வார இடைவௌியில் இரு தடுப்பூசிகளும் ஏற்றப்படும் எனவும் ஔடத உற்பத்தி, விநியோகம், ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். AstraZeneca தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு Sputnik V தடுப்பூசியை இரண்டாவதாக வழங்குதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, அமெரிக்காவின் உற்பத்தியான Pfizer தடுப்பூசியை 12 தொடக்கும் 15 வயதிற்குட்பவர்களுக்கு ஏற்றுவதற்கு கனடா அனுமதி வழங்கியுள்ளது. இந்த வயதுகளையுடைவர்களுக்கு COVID தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ள முதலாவது நாடாக கனடா பதிவாகியுள்ளது. Pfizer தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதுடன், அதற்கான மதிப்பீடுகளை நிபுணர் குழு இந்நாட்களில் முன்னெடுத்து வருகின்றது.