நடிகர் பாண்டு காலமானார்

நடிகர் பாண்டு காலமானார்

by Chandrasekaram Chandravadani 06-05-2021 | 10:48 AM
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று (06) தனது 74 ஆவது வயதில் காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 'மாணவன்' திரைப்படத்தின் மூலம் தமில் திரையுலகத்தில் அறிமுகமானார் நடிகர் பாண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பாண்டுவின் மரணத்திற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பாண்டுவின் மனைவியும் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓவியரான பாண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் கலாநிதி பட்டம் பெற்ற ஒரே நபர் இவராவார்.