உயர்ஸ்தானிகர் பதவியை நிராகரித்தார் சட்டமா அதிபர்

கனடாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவியை நிராகரித்தார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா

by Staff Writer 06-05-2021 | 7:41 PM
Colombo (News 1st) கனடாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்த யோசனையை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மறுத்துள்ளார். இலங்கையில் தங்கியிருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய தேவை தமக்குள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்ததாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் யோசனைக்கு சட்டமா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ளார்.