இன்று 1,305 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1,305 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 06-05-2021 | 7:06 PM
Colombo (News 1st) COVID தொற்றுக்குள்ளான 1,305 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, இலங்கையில் COVID தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,18,834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இன்று 810 பேர் பூரண குணமடைந்தனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,885 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 17,215 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுக்குள்ளான 734 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.