தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் – சமல் ராஜபக்ஸ சந்திப்பு

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் – சமல் ராஜபக்ஸ சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

06 May, 2021 | 7:22 pm

Colombo (News 1st) தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் நேற்று (05) அமைச்சர் சமல் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம், வடக்கு கிழக்கின் மகாவலி அதிகார சபையின் காணிப் பிரச்சினை, அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்