கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 May, 2021 | 10:14 am

Colombo (News 1st) இன்று (06) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,939 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இவர்களில் 42 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

எஞ்சிய 1,897 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 498 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 387 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 17 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 24 நபர்களும் கண்டி மாவட்டத்தில் 58 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 11 பேரும் யாழ். மாவட்டத்தில் 37 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பகுதியில் இருவருக்கும் கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒருவருக்கும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் 10 பேருக்கும் பொரளை பகுதியில் 12 ​பேருக்கும் மட்டக்குளி பகுதியில் மூவருக்கும் கல்கிசை பகுதியில் 15 பேருக்கும் முல்லேரியா பிரதேசத்தில் 55 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பகுதியில் 13 பேரும் வத்தளை பிரதேசத்தில் 72 பேரும் களனி பகுதியில் 15 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு தொற்றாளரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாட்டில் இன்று (06) வரையில் 117,529 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

100,075 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (05) மேலும் 14 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 734 பேர் மரணித்துள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பனன்கம, சுபத்ராலங்கா மாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்