கனடாவில் சிறார்களுக்கு Pfizer தடுப்பூசி

கனடாவில் சிறார்களுக்கு Pfizer தடுப்பூசி

கனடாவில் சிறார்களுக்கு Pfizer தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

06 May, 2021 | 11:43 am

Colombo (News 1st) 12 முதல் 15 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க கனடா அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முதலாவது நாடாக கனடா பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 12 வயது மேற்பட்டோருக்கு Pfizer தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

கனடாவில் ஏற்கனவே 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கி வருகின்றது.

கனடாவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் 20 வீதமானோர் 19 வயதுக்கு குறைந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்