இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

06 May, 2021 | 4:52 pm

Colombo (News 1st) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் (David McKinnon) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பிலும் முக்கியத்துவம் பெறும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் உக்கிரமடைந்துள்ள கொரோனா தொற்று தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்