1,860 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

1,860 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 05-05-2021 | 9:20 AM
Colombo (News 1st) இன்று (05) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,914 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களில் 54 பேர் வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களாவர். ஏனைய 1,860 பேரில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 542 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 531 பேரும் பதுளை மாவட்டத்தில் 30 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 06 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 18 பேரும் வவுனியா மாவட்டத்தில் 10 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 46 பேரும் கண்டி மாவட்டத்தில் 85 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 15 பேரும் யாழ். மாவட்டத்தில் 38 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் மூவரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். கொழும்பு - கோட்டை பகுதியில் 08 பேருக்கும் கொள்ளுப்பிட்டி பகுதியில் நால்வருக்கும் பம்பலப்பிட்டியில் நால்வருக்கும் வௌ்ளவத்தை பகுதியில் மூவருக்கும் பொரளை பிரதேசத்தில் 14 பேருக்கும் தெமட்டகொடை பகுதியில் இருவருக்கும் மருதானையில் மூவருக்கும் மட்டக்குளி பகுதியில் நால்வருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நால்வருக்கும் குச்சவௌி பகுதியில் இருவருக்கும் சேருவில பகுதியில் மூவருக்கும் கிண்ணியா பிரதேசத்தில் 07 பேருக்கும் மூதூர் பகுதியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேசத்தில் 16 பேருக்கும் பொகவந்தலாவை பகுதியில் மூவருக்கும் டிக்கோயா பகுதியில் இருவருக்கும் ஹங்குரன்கெத்த பகுதியில் 14 பேருக்கும் மஸ்கெலியா பகுதியில் நால்வருக்கும் நவதிஸ்பனே பகுதியில் 06 பேருக்கும் ஹட்டன் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் இருவர் மற்றும் கொடிகாமம் பகுதியில் 21 பேர் உள்ளடங்கலாக யாழ். மாவட்டத்தில் 38 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்று (05) வரையான காலப் பகுதியில் நாட்டில் 115,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேநேரம், நாடளாவிய ரீதியில் 99,153 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனிடையே, கடந்த 24 மணி ​நேரத்தில் நாட்டில் எந்தவொரு கொரோனா மரணமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இன்றைய தினமும் (05) நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். வவுனியா, கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களில் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.