ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 May, 2021 | 3:30 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 3 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்கள் ​தொடர்புபட்ட வழக்கிற்கு போலியான சாட்சியை தயாரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோஹன மெண்டிஸ் மற்றும் ஓய்வு பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் நவரத்ன பிரேமதிலக்க ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களாவர்.

நவரத்ன பிரேமதிலக்க எனும் சந்தேகநபரின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியாவிடின் அதற்கான காரணத்தை தௌிவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்