English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 May, 2021 | 5:18 pm
Colombo (News 1st) சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திரும்பியவர்களில் ஒருவரான பொன். ஜெயசீலன் தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இதற்கமைய, நீலகிரியில் வசித்து வருகின்ற தாயகம் திரும்பிய தமிழர்களின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தாயகம் திரும்பிய தமிழரான பொன். ஜெயசீலன் கூடலூர் தனித் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இலங்கையில் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டிருந்தவர்களில் சுமார் 5 இலட்சம் பேர் 1964 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் மூன்று இலட்சம் பேர் நீலகிரியில் குடியேறி வசித்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வசித்து வருகின்ற இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொன். ஜெயசீலன் தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது தாய் தந்தையர் இருவரும் தோட்டத்தொழிலாளர்கள் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 Jul, 2022 | 05:14 PM
21 Jun, 2022 | 07:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS