இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2021 | 4:41 pm

Colombo (News 1st) இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,06,65,148 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, நாடு முழுவதும் ஒரேநாளில் 3,82,315 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கையையும் சோ்த்து இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் புதன்கிழமை காலை வரையிலும் நாடு முழுவதும் ஒரேநாளில் 3,780 போ் உயிரிழந்தனா். இதையும் சோ்த்து இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பா் 19 ஆம் திகதியுடன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது. அதன்பிறகு 107 நாட்கள் கழித்து ஏப்ரல் 5-இல் தான் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1.25 கோடியாக அதிகரித்தது. ஆனால், அடுத்த 15 நாட்களில் 1.50 கோடியாகவும், கடந்த 15 நாள்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மேலும் 50 இலட்சம் பேராகவும் அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,87,229 ஆகவும், இதன் பாதிப்பு விகிதம் 16.87 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், தேசிய அளவில் கொரோனா தொற்றின் மீட்பு விகிதம் 81.91 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,69,51,731-ஆக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.09 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

 

 

Source: Dinamani


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்