ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 May, 2021 | 5:10 pm

Colombo (News 1st) ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை திகதி குறிப்பிடாது ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்தது.

2018/2019 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சையே திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்