by Staff Writer 04-05-2021 | 4:58 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சின் கன்சியூலர் பிரிவின் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, வௌிவிவகார அமைச்சின் கன்சியூலர் பிரிவின் அலுவலக நேரம் காலை 07 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர மற்றும் சாதாரண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக எதிர்வரும் வாரங்களில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மரணம், ஏற்றுமதி ஆவணங்களை உறுதிப்படுத்துதல் தவிர்ந்த ஏனைய கன்சியூலர் சேவைகளுக்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியம் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிணங்க 011 2335942, 011 2338836 அல்லது 011 2338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைத்து நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.