Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நச்சுத்தன்மையற்ற விவசாய செய்கை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நெற்செய்கையில் விவசாயிகள் அதிகளவில் களை நாசினியை விசுறுகின்றமையால், வயல் நிலம் மாத்திரமின்றி உற்பத்திகளும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அமைகிறது.
எனினும், நாற்று மேடை மூலம் இரசாயன உர பாவனையின்றி நெற் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது கிளிநொச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாய கல்லூரியின் விரிவுரையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள் உள்ளடங்கலாக நால்வர் இணைந்து இந்த நாற்று மேடை மூலம் நெல் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பில் இலங்கை விவசாயக் கல்லூரியின் விரிவுரையாளர் மகேஸ்வரன் ரஜிதன் தெரிவித்ததாவது,
இது விவசாயிகளுக்கு மிகவும் இலாபகரமான முறைமை. 20,000 வரை செலவு செய்வார்கள் என்றால், அதில் 17,000 ரூபா வரையில் செலவிட்டு களை நாசினி பயன்படுத்தினால் தான் களையை கட்டுப்படுத்த முடியும். இந்த முறையில் அதே செலவுக்கு இதனை வழங்குவதால், முதல் தடவை பெரும் விளைச்சளை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், ஏற்கனவே அடித்த கிருமி நாசினி, இரசாயனங்களின் பாதிப்புகள் நிலத்தில் இருக்கும். ஆனால், அடுத்த தடவைகளில் சிறந்த விளைச்சலைப் பெறலாம்.