கட்டானயில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து மூவர் உயிரிழப்பு; பலாங்கொடையில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 04-05-2021 | 3:15 PM
Colombo (News 1st) கட்டான, ஹல்பேவில பகுதியில் களிமண் அகழப்பட்டு நீர் நிரம்பியிருந்த குழிக்குள் வீழந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தாயும் மகளும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். குறித்த பகுதியில் கீரை கொய்வதற்கு சென்ற போதே இவர்கள் மூவரும் குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இதேவேளை, பலாங்கொடை - தஹமான பகுதியில் கற்குவாரியொன்றில் நீர் நிரம்பியிருந்த குழிக்குள் வீழ்ந்து சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். பேஹின்ன பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். நண்பர்களுடன் குளிக்கச்சென்றிருந்த போதே குழிக்குள் வீழ்ந்துள்ளார்.