இந்தியாவில் 2 கோடிக்கும் அதிக கொரோனா நோயாளர்கள்

இந்தியாவில் 2 கோடிக்கும் அதிக கொரோனா நோயாளர்கள்

by Staff Writer 04-05-2021 | 12:24 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 02 கோடியை கடந்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகளவானோர் COVID - 19 தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவையடுத்து இந்தியா இரண்டாமிடத்திலுள்ளது. இந்தியாவில் இதுவரை 222,408 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. டில்லியின் மும்பை நகரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2624 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாளொன்றில் முதல்தடவையாக குறைந்தளவிலான கொவிட் நோயாளர்கள் பதிவான சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. எவ்வாறாயினும், மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேஷ், தமிழகம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக அதிகரிப்பு காணப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், லண்டனிலிருந்து சென்னைக்கு சுமார் ஆயிரம் மெற்றிக் தொன் ஒக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. நாளாந்தம் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.