கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 May, 2021 | 10:29 am

Colombo (News 1st) இன்று (04) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,923 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 08 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய உள்நாட்டவர்கள் எனவும் ஒருவர் வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டவர் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எஞ்சிய 1,913 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 529 பேர், கம்பஹா மாவட்டத்தில் 232 பேர், கண்டி மாவட்டத்தில் 58 நபர்கள், யாழ். மாவட்டத்தில் 16 பேர், புத்தளம் மாவட்டத்தில் 18 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 10 பேர், அம்பாறை மாவட்டத்தில் 20 நபர்கள், நுவரெலியா மாவட்டத்தில் 104 பேர், வவுனியா மாவட்டத்தில் இருவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் நால்வர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மூவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கறுவாத்தோட்டம் பகுதியில் ஐவர், பொரளை பகுதியில் 09 பேர், தெமட்டகொடை பகுதியில் 07 பேர், மருதானை பகுதியில் 17 பேர், கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 09 பேர், மட்டக்குளி பகுதியில் 08 பேர், புறக்கோட்டை பகுதியில் 35 பேர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 529 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தில் 23 பேருக்கும் அம்பன்கமுவ பகுதியில் 06 பேருக்கும் பொகவந்தலாவை பகுதியில் ஐவருக்கும் டிக்கோயா பகுதியில் ஐவருக்கும் கினிகத்ஹேனை பகுதியில் மூவருக்கும் ஹட்டன் பகுதியில் 23 பேருக்கும் கந்தப்பொல பகுதியில் இருவருக்கும் கொட்டகலை பகுதியில் 06 பேருக்கும் லிந்துலையில் மூவருக்கும் நோர்வூட் பகுதியில் இருவருக்கும் ராகலை பிரதேசத்தில் மூவருக்கும் வலப்பனை பகுதியில் 23 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (04) காலை வரை நாட்டில் 113,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், 98,209 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (03) 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டனர்.

நுவரெலியா, முகத்துவாரம், நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய, ஜாஎல, மாவில்மட, மாலபே (இருவர்), பொரளை, நிட்டம்புவ, பாணந்துறை, கம்பஹா மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 13 பேரே கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.

இதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 709 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேநேரம், நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்