இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 May, 2021 | 7:29 am

Colombo (News 1st) நுவரெலியா, கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்கள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராம சேவகர் பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவின் போடைஸ் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிலுள்ள வில்லோரவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இரத்தினபுரி மாவட்டத்தின் கங்குல்விட்டிய கிராம சேவகர் பிரிவு, பொத்துப்பிட்டிய வடக்கு மற்றும் ஹப்புகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள போம்புவல 728C, 728D, 728B, 728, 728F, 728A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்