பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

எழுத்தாளர் Staff Writer

03 May, 2021 | 4:20 pm

Colombo (News 1st) பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 01 க்கு 0 என கைப்பற்றியது.

இன்று (03) நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 493 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்தியது.

இதன்பிரகாரம் போட்டியில் பங்களாதேஷின் வெற்றியிலக்கு 437 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இன்றைய ஐந்தாம் நாளில் 05 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது.

இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சினால் பங்களாதேஷ் 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிரவீன் ஜெயவிக்கிரம இந்தப் போட்டியில் 11 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கை மண்ணில் அறிமுக வீரர் ஒருவர் வீழ்த்திய அதிகூடிய விக்கெட் பெறுதி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்