இன்றைய தினம் முடக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்றைய தினம் முடக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்றைய தினம் முடக்கப்பட்ட பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 May, 2021 | 1:38 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மெட்டிய (494C) கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவின் திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் (173J) கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ்வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிங்வத்தை (696) கிராம சேவகர் பிரிவு, நாரம்பிட்டிய (696A) கிராம சேவகர் பிரிவு பிங்வத்தை மேற்கு (663A) கிராம சேவகர் பிரிவு மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவின் பண்டாரகம கிழக்கு (693A) கிராம ​சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்கல்ல (454) கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிலியந்தலை பொலிஸ் பிரிவு இன்று (03) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பொலிஸ் பிரிவின் கொறக்காப்பிட்டிய 584 மற்றும் நம்பமுனுவ 584 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத்தவிர தம்பே 566, பட்டகெத்தர வடக்கு 565, பெலன்வத்த மேற்கு 582 A, கெஸ்பேவ தெற்கு 572 A, பெலன்வத்த கிழக்கு 582 B, மாகந்தன கிழக்கு 569, மாவித்தர வடக்கு 586 A, மடபத்த 567  ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (03) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்ட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்