Colombo (News 1st) பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டு, 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மாத்திரம் நாளை (03) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
பிலியந்தலை பொலிஸ் பிரிவின் கொறக்காப்பிட்டிய 584 மற்றும் நம்பமுனுவ 584 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை தவிர தம்பே 566, பட்டகெத்தர வடக்கு 565, பெலன்வத்த மேற்கு 582 A, கெஸ்பேவ தெற்கு 572 A, பெலன்வத்த கிழக்கு 582 B, மாகந்தன கிழக்கு 569, மாவித்தர வடக்கு 586 A, மடபத்த 567 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (03) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதனிடையே, மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரவ்வல வடக்கு 581 D கிராம சேவகர் பிரிவு நாளை (03) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
