முஸ்லிம் காங்கிரஸுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – டெலோ

முஸ்லிம் காங்கிரஸுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – டெலோ

எழுத்தாளர் Staff Writer

02 May, 2021 | 9:42 pm

Colombo (News 1st) கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுகும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (01) அறிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக பரிசீலிப்பதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்