பஸ் மற்றும் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

பஸ் மற்றும் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

பஸ் மற்றும் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2021 | 3:17 pm

Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் பஸ் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச். பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாளை (03) முதல் தனியார் பஸ் சேவைகளையும் 25 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் தூர இடங்களுக்கான மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில்கள் சிலவற்றை இரத்து செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்