by Staff Writer 01-05-2021 | 4:16 PM
Colombo (News 1st) தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1500 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பீடி இலைகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி 1 கோடியே 20 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பீடி இலைகள் தூத்துக்குடியிலிருந்து சர்வதேச கடற்பிராந்தியம் வரை கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இலங்கை படகு மூலம் அவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பீடி இலைகளை கொண்டு செல்வதற்காக வந்த மூன்று வாகனங்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் சந்கேநபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.