Colombo (News 1st) COVID-19 ஒழிப்பு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வழிகாட்டல் ஒழுங்கு விதிகள் வௌியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய,
- 2021 மே மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 20 ஆம் திகதிக்கு பின்னர் COVID-19 நிலைமையை கருத்திற்கொண்டு அறிவித்தல் விடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- திரையரங்குகள், கலையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகங்கள், களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், Casino, இரவுநேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநாடுகள், கூட்டங்கள், செயலமர்வுகள் என்பனவற்றை நடத்த எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு அங்காடிகள், பாரிய வர்த்தக அங்காடிகள், நிதி நிறுவனங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் 25 வீத பணியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மத வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஹோட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் வாடி வீடுகள் என்பனவற்றில் 50 வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்படல் வேண்டும். அத்துடன், இவை இரவு 10 மணிக்கு பின்னர் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதியில்லை.
- நீதிமன்றங்களுக்கு 25 வீத மக்கள் பிரசன்னத்திற்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.