மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடல்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2021 | 5:25 pm

Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர ஆகிய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்தார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் மாவட்ட செயலகங்களில் வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சைகள் மற்றும் செயன்முறை பரீட்சைகள் என்பனவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், மாவட்ட செயலகங்களில் வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்தார்.

அத்துடன், வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டிய அலுவலகங்களில் 011 2 678 877 எனும் இலக்கத்திற்கு அழைத்து முற்பதிவு செய்துகொண்டவர்களுக்கான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்