ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

01 May, 2021 | 4:52 pm

Colombo (News 1st) ஜப்பானில் இன்று 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

பசுபிக் சமுத்திரத்தில், Miyagi – Ishinomaki பகுதியில் 47 கிலோமீட்டர் ஆழத்தில், இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக அமெரிக்க புவிச்சரிதவியல் பணியகம் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு பாரிய சுனாமி ஏற்பட்டு 18,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக் காரணமான நிலஅதிர்வு பதிவாகிய இடத்திற்கு அருகிலேயே இந்த நில அதிர்வும் பதிவாகியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்