புலமைப்பரிசில்: மீள்திருத்த பெறுபேறுகள் ​வௌியீடு

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வௌியீடு

by Staff Writer 30-04-2021 | 3:07 PM
Colombo (News 1st) ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. www.doenets.lk இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஒன்லைன் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்னஞ்சல் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 011 2 788 137 அல்லது 011 2 784 323 எனும் தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.