ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - தொழிற்சங்கங்கள் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 30-04-2021 | 3:42 PM
Colombo (News 1st) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் 21 பிரேரணைகளை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த 21 பிரேரணைகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ''சுதந்திரத்திற்காக ஒன்றிணைவோம் - சவால்களை வெற்றிகொள்வோம்'' என இந்த திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட 21 யோசனைகள் இதில் உள்ளட்டங்கியுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.