நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2021 | 3:14 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்டத்தின் கலேவெல, தம்புளை, நாவுல, மாத்தளை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், குருநாகல் மாவட்டத்தின் பன்னல பொலிஸ் பிரிவும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் உடுபெத்தாவ, கல்அமுன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பகுதியிலுள்ள ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்