இயக்குனர் கே. வி. ஆனந்த் காலமானார்; பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை

இயக்குனர் கே. வி. ஆனந்த் காலமானார்; பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை

இயக்குனர் கே. வி. ஆனந்த் காலமானார்; பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2021 | 4:02 pm

Colombo (News 1st) தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர் கே. வி. ஆனந்த் தனது 54 ஆவது வயதில் காலமானார்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (30) அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், கே.வி.ஆனந்தின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததால், பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் வைத்தியசாலையிலிருந்து மயானத்திற்கே பூதவுடல் கொண்டு செல்லப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மயானத்திற்கு எடுத்துச்செல்வதற்கு முன்னர் கே.வி.ஆனந்தின் உடல் அவரது இல்லத்திற்கு மாத்திரம் 5 நிமிடங்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முழுவதுமாக மூடப்பட்ட உடல் அம்பியுலன்ஸிலுள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன், குடும்பத்தினர் வெளியே இருந்தவாறே அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அயன், மாற்றான், கவன், கோ, அநேகன் உள்ளிட்ட திரைப்படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.

நேருக்கு நேர், காதல் தேசம், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அவர் ஔிப்பதிவு செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்