இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2021 | 9:20 pm

Colombo (News 1st) தொடரும் COVID தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சில பிரதேசங்கள் இன்று முற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

அதன்படி, மாத்தளை மாவட்டத்தின் கலேவெல, தம்புளை, நாவுல, மாத்தளை ஆகிய பொலிஸ் பிரிவுகளும்

குருநாகல் மாவட்டத்தில் பன்னல பொலிஸ் பிரிவு, உடுபத்தாவ கிராம சேவையாளர் பிரிவும்

மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவும், கல்அமுன கிராம சேவையாளர் பிரிவும் ஹெலமுல்ல கிராம சேவையாளர் பிரிவும்

இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID-19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, பொலன்னறுவை , எலஹெர, சருபிம ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவில் பதுரெலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொல்லுன்ன, இங்குருதலுவ, மிதலன, மோரபிட்டிய, பெலந்த, ஹெட்டிகல்ல, மோரபிட்டிய வடக்கு ஆகிய கிரம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தினியாவல பொலிஸ் பிரிவில், தினியாவல A கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவில், வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்தாவ, போதலாவ, கட்டுயகெலே வெல்மீகொட, பஹல ஹெவெஸ்ஸ, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்