மாஸ்க் இன்றி 4000 பேர் கலந்துகொள்ளும் விருது விழா

முகக்கவசம், சமூக இடைவெளி தேவையில்லை: 4000 பேர் கலந்துகொள்ளும் இசை விருது விழா

by Bella Dalima 28-04-2021 | 3:30 PM
Colombo (News 1st) கொரோனாவிற்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இசை விருது விழாவொன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’ (BRIT Awards) மே 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள O2 Arena-வில் நடத்தப்படவுள்ளது. இதில் 4,000 பேர் கலந்துகொள்ள அரசாங்கம் அனுமதித்துள்ளது. மேலும், இதில் கலந்துகொள்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெறவுள்ளதாம். மேலும் இதில் கலந்துகொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர். நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. ஏதெனும் தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நிகழ்ச்சிக்கு பின்னரும் சோதனை செய்யப்படவுள்ளது.