by Staff Writer 28-04-2021 | 2:10 PM
Colombo (News 1st) அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்துள்ள 40 கட்சிகளில் 18 கட்சிகளுக்கு நேர்முகப் பரீட்சைகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாட்களாக நடைபெறும் நேர்முகப் பரீட்சைகள் நாளை (29) நிறைவடையவுள்ளன.
இதற்காக தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
இரண்டு கட்டங்களாக நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுவதுடன், அவற்றில் தகுதி பெறும் கட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளன.