ரஷ்ய பிரஜைகள் மீது பிரிட்டன் தடை விதிப்பு

ரஷ்ய பிரஜைகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிரிட்டன் தடை விதிப்பு

by Staff Writer 27-04-2021 | 10:44 AM
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 14 ரஷ்ய பிரஜைகள் உள்ளிட்ட 22 பேருக்கு எதிராக பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது. ஏனையோர் தென்னாபிரிக்கா, தென் சூடான் மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான புதிய சட்டதிட்டத்திற்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களை அடையாளங்காணும் பணிகளில் பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள், பெரும் பங்கினை ஆற்றியுள்ளதாக பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் டொமினிக் ராப் குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களில் பாரிய வரி மோசடியில் ஈடுபட்ட 14 ரஷ்யர்களும் பெரும் ஊழலில் ஈடுபட்ட தென்னாபிரிக்காவின் 03 வர்த்தகர்களும் உள்ளடங்குகின்றனர். பிரித்தானியாவினால் சர்வதேச அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டோர் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.